இந்திய அமெரிக்க சமூகத்திற்கான ஜோ பிடெனின் செய் பணி நிரல்

செனட்டராகவும், செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும், துணைத் தலைவராகவும், ஜோ பிடென் இந்திய அமெரிக்கர்களுக்கு ஆதரவளித்து வந்துள்ளார், மேலும் இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு வலுவான நட்புறவைக் கொண்டிருந்தார். இந்திய அமெரிக்கர்களின் மாறுபட்ட மற்றும் துடிப்பான சமூகங்கள் யூனியனின் ஒவ்வொரு மாநிலத்திலும் நம் தேசத்தின் கலாச்சாரத்தை வளப்படுத்துகின்றன. ஜனாதிபதியாக, பிடென் இந்தச் சமூகங்களுடன் இணைந்து செயல்படுவார்; அமெரிக்காவின் வெற்றி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அவர்களின் அசாதாரண பங்களிப்புகளைக் கொண்டாடுவார்; இந்திய அமெரிக்கர்களின் தேவைகளைக் கேட்டு, அவர்களுடைய முன்னுரிமைகளை நிலைநாட்டும் கொள்கைகளை வகுப்பார். அனைத்து அமெரிக்கர்களையும் போலவே இந்திய அமெரிக்கர்களும் - கல்வி, உயர்தரமான, அனைவருக்கும் கிடைக்கும்படியான சுகாதார பராமரிப்புக்கான அணுகல், காலநிலை நெருக்கடிக்குத் தீர்வு மற்றும் நமது மதிப்புகளுடன் ஒத்துப்போகும் வகையில் குடியேற்ற முறையை சீர்திருத்துதல் மற்றும் நவீனமயமாக்குதல் போன்ற நமது எதிர்காலத்தின் முக்கியக் கூறுகளில் ஆழ்ந்த பங்களிப்பை வழங்குகிறார்கள். பிடென் தனது நிர்வாகத்தில், அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் கமலா ஹாரிஸுடன் தொடங்கி, தெற்காசிய அமெரிக்கர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வார். கமலா ஹாரிஸின் தாயார் அமெரிக்காவில் படித்து அமெரிக்காவில் ஒரு வாழ்க்கையைத் தொடங்க இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தார். எங்கள் அரசாங்கம் அமெரிக்காவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும், மேலும் அவர்களின் சமூகங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்திய அமெரிக்கர்களின் குரல்கள் சேர்க்கப்படும். 

COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதிலிருந்து, நமது குடியேற்ற முறையை சீர்திருத்துவது, நமது பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவது வரை, பிடென்-ஹாரிஸ் நிர்வாகம் இந்திய அமெரிக்கர்கள் நம்பக்கூடிய ஒன்றாக அமையும். 

 

வெறுப்பு மற்றும் மதவெறியின் எழுச்சி அலையைத் தடுப்பார்

FBI இன் வெறுப்புக் குற்றப் புள்ளிவிவரங்களின் படி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, நம் நாடு முழுவதும் நடக்கும் வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.தெளிவான மொழியிலும் குறியீட்டிலும், தப்பெண்ணத்தையும் வெறுப்பையும் ஊக்குவிக்கும் மற்றும் தைரியப்படுத்தும் ஒரு ஜனாதிபதி நம்மிடையே இருக்கிறார் - இது ஆபத்தானது. 

அனைத்து பின்னணியிலும் இருந்து வந்துள்ள இந்திய அமெரிக்கர்கள் - இந்து, சீக்கிய, முஸ்லீம், ஜெயின் மற்றும் பலர் - கொடுமைப்படுத்துதல் மற்றும் இனவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர் முன்னெப்போதையும் விட இப்போது வாஷிங்டனில் உள்ள நமது தலைவர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதியளிக்க வேண்டும். 

ஒபாமா-பிடென் நிர்வாகத்தின் போது, சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் பௌத்தர்களை உள்ளடக்குவதற்காக FBI தனது வெறுப்புக் குற்றப் புள்ளிவிவரத் திட்டத்தை விரிவுபடுத்தியது. ஜனாதிபதியாக, பிடென் வெறுப்புத் தாக்குதல்கள் அதிகரிப்பதை நேரடியாகக் கையாள்வார் மற்றும் வெறுப்புக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒருவர் துப்பாக்கியை வாங்குவதையோ அல்லது வைத்திருப்பதையோ தடைசெய்யும் சட்டத்தை இயற்றுவார். வெறுப்புக் குற்றங்களைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் தலைவர்களை பிடென் நீதித்துறையில் நியமிப்பார், மேலும் மத அடிப்படையிலான வெறுப்புக் குற்றங்கள் உட்பட - அனைத்து வெறுப்புக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், வெள்ளை தேசியவாத பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும் கூடுதல் வள ஆதாரங்களை வழங்குமாறு தனது நீதித் துறைக்கு உத்தரவிடுவார். வழிபாட்டு இல்லங்கள் மற்றும் குருத்வாராக்கள், மந்திர்கள், கோயில்கள் மற்றும் மசூதிகள் போன்ற பிற மத சமூகத் தளங்களில் நிகழும் சில வெறுப்புக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் சட்டத்தையும் அவர் நிலைநாட்டுவார். மேலும், அவர் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழிபாட்டு இல்லங்களுக்கு எதிராகச் செய்யப்படும் இத்தகைய கொடூரமான வன்முறைச் செயல்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தை முழுமையாக நிலைநாட்டுவதை நீதித்துறை பின்பற்றுவதை உறுதிசெய்வார். 

 

வழிபாட்டு இல்லங்களின் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வார்

2012 ஆம் ஆண்டில், விஸ்கான்சின் ஓக் க்ரீக்கில் உள்ள குருத்வாராவில் ஒரு வெள்ளை மேலாதிக்கவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சீக்கிய சமூகம் ஒரு பயங்கரமான சோகத்தைச் சந்தித்தது, அதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். ஜனவரி 2019 இல், ஒரு இந்து மந்திர் காழ்ப்புணர்ச்சி மற்றும் அழிவின் கொடூரமான செயலுக்கு பலியானது, ஜன்னல்கள் சிதைந்தன மற்றும் மதவெறிச் செய்திகள் சுவர்கள் முழுவதும் ஸ்ப்ரே-பெயிண்ட் செய்யப்பட்டன. ஒரு சிலையின் (கடவுள் சிலை) சேதப்படுத்தப்பட்டது மேலும் ஒரு நாற்காலி கத்தியால் குத்தப்பட்டது. மந்திர்கள், மசூதிகள், குருத்வாராக்கள் மற்றும் கோயில்கள் புனிதமான இடங்கள் என்பதையும், காழ்ப்புணர்ச்சி மற்றும் அழிவுச் செயல்கள் ஒரு சமூகத்தின் 'நாம் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்' என்ற உணர்வையும், அவர்கள்சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வழிபாடு செய்வதற்கான திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதையும் பிடென் புரிந்துகொண்டுள்ளார். அமெரிக்கா மதச் சுதந்திரத்தை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, ஜனாதிபதியாக, பிடென் வெறுப்பு நிறைந்த வன்முறை மற்றும் அச்சுறுத்தல் செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவார், மேலும் நமது உயர்ந்த மதிப்புகளை அடைய உதவுவார். வழிபாட்டுத் தலங்கள், மத்திய அரசிடமிருந்து வலுவான, நேரடிப் பாதுகாப்பு ஆதரவைப் பெறுவதையும் அவர் உறுதி செய்வார். கொடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, நன்கொடைகள் மற்றும் உள்ளக நிதி திரட்டும் முயற்சிகளை நம்பி இருப்பதற்கு, நம் நம்பிக்கை அடிப்படையிலான அமைப்புகளை நாம் விட்டுவிட முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (டிஎச்எஸ்) இலாப நோக்கற்ற பாதுகாப்பு மானியத் திட்டத்தின் (என்எஸ்ஜிபி) மூலம் நம்பிக்கை சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கப்படும் நேரடி பாதுகாப்பு மானிய நிதியில் உடனடியான மற்றும் கணிசமான அதிகரிப்பைப் பெற பிடென் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவார்.

 

அனைத்து அமெரிக்கர்களின் அமெரிக்கக் கனவை மீட்டெடுப்பார்  

அமெரிக்காவின் முதுகெலும்பை - நடுத்தர வர்க்கத்தை - மீண்டும் கட்டியெழுப்ப பிடென் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுகிறார், மேலும் இந்த நேரத்தில் எல்லோரும் அவருடன் வருவதை உறுதிசெய்வார். நடுத்தர வர்க்கம் என்பது ஒரு எண்ணிக்கை அல்ல - சொந்த வீடு வாங்குதல், உங்கள் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்புதல், சேமித்து முன்னேறுதல் போன்ற மதிப்புகளின் ஒரு தொகுப்பு என்று அவர் அறிவார். அனைத்து தொழிலாளர்களும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும், அவர்களுக்குத் தகுதியான ஊதியம், சலுகைகள் மற்றும் பணியிடப் பாதுகாப்புகளைப் பெறுவதையும் அவர் உறுதி செய்வார். பிடென் ஒரு வலுவான, அனைத்தையும் உள்ளடக்கிய நடுத்தர வர்க்கத்தை  உருவாக்குவதகாக உறுதி பூண்டுள்ளார். பல இந்திய அமெரிக்கர்கள் சிறு வணிக உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களாக இருக்கிறார்கள். வெற்றிகரமான மாநில மற்றும் உள்ளூர் முதலீட்டு முயற்சிகளுக்கு நிதியளிக்கும் மற்றும் மிகவும் பயனுள்ள புதிய சந்தைகளின் வரிக் கடனை நிரந்தரமாக்கும், குறைந்த வட்டி வணிகக் கடன்களுக்கான அணுகலை விரிவுபடுத்தும், மேலும் செலவு இல்லாத வணிக இன்குபேட்டர்கள் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களின் தேசிய வலையமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைக்கான தடைகளை நீக்கும் ஒரு சிறு வணிக வாய்ப்புத் திட்டத்தின் மூலம் பிடென் பொது-தனியார் முதலீட்டைத் தூண்டுவார்.

 

புலம்பெயர்ந்தோரின் தேசமாக நமது மதிப்புகளைப் பாதுகாப்பார்  

பெருமளவில் புலம்பெயர்ந்தோர் வாழும் சமூகமாக, ஆனால் சில சந்தர்ப்பங்களில் தலைமுறைகளைத் தாண்டிய அமெரிக்க வேர்ளுடன், புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்கு கொண்டு வரும் வலிமையையும் பின்னடைவையும்  இந்திய அமெரிக்கர்கள் நேரடியாக அறிவார்கள். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் புலம்பெயர்ந்தோர் தேசமான நமது மதிப்புகள் மற்றும் நமது வரலாற்றின் மீது இடைவிடாத தாக்குதலை நடத்தியுள்ளார். இது தவறு, பிடென் ஜனாதிபதியாக பதவியேற்கும்போது இது நிறுத்தப்படும். டிரம்பின் "முஸ்லீம் தடையை" பிடென் முதல் நாளிலேயே ரத்து செய்வார், மேலும் நமது எல்லைப்பகுதியில் குழப்பத்தையும் மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் புகலிடக் கொள்கைகளையும் மாற்றியமைப்பார். இந்தியாவில் இருந்து 500,000 க்கும் அதிகமானோர் உட்பட - கிட்டத்தட்ட 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமைக்கு வழிவகுப்பதன் மூலம் குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான முன்னுரிமையுடன், நமது அமைப்பை நவீனப்படுத்தும் சட்டமன்ற குடியேற்ற சீர்திருத்தத்தை நிறைவேற்ற அவர் உடனடியாக காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவார். 

பிடென் குடும்ப அடிப்படையிலான குடியேற்றத்தை ஆதரிப்பார் மற்றும் குடும்ப ஒற்றுமையை நமது குடியேற்ற அமைப்பின் முக்கியக் கொள்கையாக பாதுகாப்பார், இதில் குடும்ப விசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைக் குறைப்பதும் அடங்கும். அவர் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் நிரந்தர, வேலை அடிப்படையிலான குடியேற்றத்திற்காக வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பார் மற்றும் STEM துறைகளில் பிஎச்.டி திட்டங்களின் சமீபத்திய பட்டதாரிகளுக்கு விலக்கு வழங்குவார். மேலும், ஊதியங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான உயர் திறமை, சிறப்பு வேலைகள் ஆகியவற்றிற்கான தற்காலிக விசா முறையை சீர்திருத்துவதற்கும், பின்னர் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பல இந்தியக் குடும்பங்களை நீண்ட காலம் காத்திருக்கச் செய்துள்ள வேலைவாய்ப்பு அடிப்படையிலான நாடு வாரியான கிரீன் கார்டுகளின் வரம்புகளை நீக்குவதற்கும் அவர் ஆதரவளிப்பார். 

கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான இயற்கைமயமாக்கல் செயல்முறையை பிடென் மீட்டெடுத்து பாதுகாப்பார். மேலும், வருடாந்திர உலகளாவிய அகதிகள் சேர்க்கை இலக்கை 125,000 ஆக நிர்ணயிப்பதன் மூலம் இந்த நாட்டிற்கு நாம் வரவேற்கும் அகதிகளின் எண்ணிக்கையை அவர் அதிகரிப்பார், மேலும் காலப்போக்கில் அதை உயர்த்த முற்படுவார், இது நமது பொறுப்பு, நமது மதிப்புகள் மற்றும் முன்னிகழ்வற்ற உலகளாவிய தேவை ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஆண்டுதோறும் 95,000 அகதிகள் என்ற குறைந்தபட்ச சேர்க்கை எண்ணிக்கையை நிறுவ அவர் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவார். டிஏசிஏ திட்டத்தை மீண்டும் நிலைநிறுத்துவதன் மூலம் கனவு காண்பவர்களுக்கான நிச்சயமற்ற தன்மையை பிடென் நீக்குவார் மற்றும் அவர்களின் குடும்பங்களை மனிதாபிமானமற்ற பிரிவினையிலிருந்து பாதுகாக்க அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்வார். மேலும், அவர் பணியிடச் சோதனைகளை முடிவுக்குக் கொண்டு வருவார் மேலும் குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து பிற முக்கிய இடங்களைப் பாதுகாப்பார். குடியேற்ற அமலாக்க நடவடிக்கைக்கு பயந்து மருத்துவ உதவியை நாடவோ, அல்லது பள்ளிக்கு, அவர்களின் வேலைக்கு அல்லது அவர்களின் வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லவோ யாரும் பயப்படக்கூடாது. 

 

மதப் பணியாளர் விசாக்களுக்கான நெறிப்படுத்தல் செயலாக்கம் 

பல இந்திய அமெரிக்கர்கள், தற்காலிக மத பணியாளர் (ஆர் -1) விசாவில் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டினராக இருக்கும், அறிஞர்கள் மற்றும் மத நிபுணர்களின் ஆலோசனை, ஆதரவு மற்றும் ஞானத்தை நம்பியுள்ள நம்பிக்கைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பல இந்திய அமெரிக்க அமைப்புகளுக்கு, மதத் தொழிலாளர் விசாக்களுக்கான சமர்ப்பிப்பு மற்றும் மறுஆய்வு செயல்முறைக்கு கணிசமான நிர்வாக மற்றும் நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. மேலும், செயலாக்கத் தாமதங்கள் பயணத் தாமதங்களுக்கு வழிவகுக்கும், இது நாடு முழுவதும் உள்ள இந்தச் சமூகங்களை மோசமாக பாதிக்கும். மதத் தொழிலாளர் விசா திட்டத்தை உண்மையாகப் பயன்படுத்துவதற்கான நம்பகமான தட பதிவுடன் எந்தவொரு நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பும் சமர்ப்பித்த மதத் தொழிலாளர் விசாக்களை மறுஆய்வு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் திட்டங்களை அடையாளம் காண, பிடென் வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) ஆகியவற்றை வழிநடத்துவார். 

 

இந்திய அமெரிக்க சமூகத்திற்கான மொழித் தடைகளை நீக்குவார்  

முக்கியச் சேவைகள் மற்றும் வளங்களுக்கான மொழித் தடைகள் வரையறுக்கப்பட்ட ஆங்கிலப் புலமை வாய்ந்த இந்திய அமெரிக்கர்கள் தங்கள் திறனையும் அமெரிக்கக் கனவையும் நனவாக்குவதைத் தடுக்கலாம். மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில புலமை வாய்ந்த நபர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற அரசு சேவைகளுக்கான அணுகல் இருப்பதை உறுதி செய்வதற்கும், இந்திய அமெரிக்க தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான கூட்டாட்சி திட்டங்களுக்கான அணுகலை அதிகரிப்பதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்கும் பிடென் செயல்படுவார். புதிய புலம்பெயர்ந்தோருக்கு வேலை தேட உதவும் வகையிலும், அணுகல் சேவைகள் மற்றும் ஆங்கில மொழி கற்றல் வாய்ப்புகள்; மற்றும் பள்ளி அமைப்பு, சுகாதார அமைப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிற முக்கிய அம்சங்களுக்கு அணுகல் வழங்கும் வகையிலும் அவர் அண்டை வள மையங்கள் அல்லது வரவேற்பு மையங்களை உருவாக்குவார். மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் திறனை அடைய உதவும் வகையில் அனைத்து பொதுப் பள்ளிகளுக்கும் போதுமான ஆங்கில மொழி கற்றல் ஆதரவு இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் பணியாற்றுவார்.

 

 

 

இந்திய அமெரிக்கர்களின் பன்முகத்தன்மை மற்றும் பங்களிப்புகளுக்கு மதிப்பளிப்பார்

 

ஒபாமா-பிடென் நிர்வாகம் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை ஒரு முக்கிய பலமாக மதித்து கொண்டாடியது, இதில், இந்திய அமெரிக்கர்களின் இராணுவ சேவையைகௌரவிக்கும் முதல் வெள்ளை மாளிகை நிகழ்வும் வெள்ளை மாளிகை, கடற்படை ஆய்வகம், துணை ஜனாதிபதியின் இல்லம் மற்றும் பெண்டகன் ஆகிய இடங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள்  ஆகியவை அடங்கும்.  பிடென் நிர்வாகம், அமெரிக்க நம்பிக்கை மற்றும் பாரம்பரிய சமூகங்களின் முக்கியமான கலாச்சாரக் கொண்டாட்டங்களை மீண்டும் அங்கீகரித்து கௌரவிக்கும். மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் சீருடையில் இருக்கும்போது அவர்களுடைய மாதம் சார்ந்த தலையணிகளை அணியும் வகையில் அமெரிக்க இராணுவக் கொள்கையை மாற்றியமைத்துநமது துணிச்சலான வீரர்கள் தங்கள் நாட்டிற்குச் சேவை செய்யும்பொழுதும் அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து ஒபாமா-பிடென் நிர்வாகம் வரலாற்றை உருவாக்கியது. எங்கள் அனைத்து ராணுவச் சேவைகளிலும் நியாயமான மதம் சார்ந்த வசதிகளை உறுதிப்படுத்த பிடென் முயற்சிப்பார். மேலும், அவர் இந்திய அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அமெரிக்காவைப் போல தோற்றமளிக்கும் கூட்டாட்சி அதிகாரிகளையும் நீதிபதிகளையும் பரிந்துரைத்து நியமிப்பார். கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சமூகங்கள், முடிவெடுக்கும் செயல்முறையின் இன்றியமையாத பகுதியாக இருப்பதை உறுதி செய்வதற்காக பிடென் அந்தச் சமூகங்களின் முக்கியப் பங்குதாரர்களையும் முடிவுகளில் பங்கேற்கச் செய்வார். 

 

அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளியில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவார்

ஜிப் குறியீடு, அவர்களின் பாலினம், அவர்களின் பாலியல் நோக்குநிலை, தோலின் நிறம், அவர்களின் மதம், அவர்களுக்கு இயலாமை இருக்கிறதா, அல்லது பெற்றோரின் வருமானம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு நல்ல கல்வியைப் பெற வேண்டும். மாணவர்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமான பெரியவர்களாக வளரக்கூடிய வகையில், கல்வியாளர்களுக்கு ஆதரவு, கௌரவம் மற்றும் அவர்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான ஊதியம் வழங்கப்படுவதை பிடென் உறுதி செய்வார். பள்ளி மாவட்டங்கள் கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் கொள்கைகளை உருவாக்க வழிவகுக்கும் பாதுகாப்பான பள்ளிகள் மேம்பாட்டு சட்டம் வகுக்கப்படுவதை ஆதரிப்பார், மேலும் அவர் நமது பள்ளிகளில் உளவியலாளர்கள், ஆலோசகர்கள், செவிலியர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவார், இதனால் நமது குழந்தைகள் அனைவருக்கும் தேவையான மனநலப் பாதுகாப்பு கிடைக்கும்.

மதத்தைப் பின்பற்றும் இளைஞர்களை கொடுமைப்படுத்துவதை குறிப்பாக எதிர்க்கும் திட்டங்கள் உட்பட, கொடுமைப்படுத்துதல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு நீதித் துறை மற்றும் கல்வித் துறைக்கு பிடென் நிர்வாகம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும். ஒபாமா-பிடென் வெள்ளை மாளிகை AAPI கொடுமைப்படுத்துதல் தடுப்பு பணிக்குழுவை சமூக அமைப்புகளுடன் மீண்டும் நிறுவுவார். 

பிடென், கல்வியாளர் வழிகாட்டுதல், தலைமைத்துவம் மற்றும் கூடுதல் கல்வி ஆகியவற்றிலும் முதலீடு செய்வார், இதனால் கல்வியாளர்கள் அடுத்த தலைமுறை அமெரிக்கர்களை வடிவமைப்பதில் தங்கள் ஆற்றலை மையப்படுத்த முடியும். உயர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பள்ளி மாவட்டங்களுக்கிடையிலான நிதி இடைவெளியை அகற்றுவதற்கும், வருமானம் 125,000 டாலருக்கும் குறைவாக உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியை கட்டணமில்லாமல் செய்வதற்கும் மாணவர்களின் வெற்றியை மேம்படுத்துவதற்கும், வளமான நடுத்தர வர்க்கத்தை வளர்ப்பதற்கும் அனைவருக்கும் இரண்டு ஆண்டு சமுதாயக் கல்லூரி அல்லது கடன் இல்லாமல் பிற உயர்தர பயிற்சிக்கான அணுகல் இருப்பதை உறுதிசெய்யவும் தலைப்பு I நிதியுதவியை அவர் மூன்று மடங்காக உயர்த்துவார்.  

 

அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மைக்கு ஆதரவளிப்பார்

நமது மூலோபாய ஈடுபாடு, மக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் உலகளாவிய சவால்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றை முறையாக ஆழப்படுத்துவதில் செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் பிடென் ஒரு முக்கியப் பங்கை வகித்தார். 2006 ஆம் ஆண்டில்: “2020 ஆம் ஆண்டில், உலகின் மிக நெருக்கமான இரு நாடுகள் இந்தியா மற்றும் அமெரிக்காவாக இருக்கும் என்பது எனது கனவு” என்ற அமெரிக்க-இந்தியா உறவுகளின் எதிர்காலம் குறித்த தனது கண்ணோட்டத்தை பிடென் அறிவித்தார். அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் 2008 இல் காங்கிரசிற்குத் தலைமை தாங்குவது, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து செயல்படுவது உட்பட, அந்தக் கண்ணோட்டத்தை ஒரு யதார்த்தமாக்குவதற்கும் அவர் பணியாற்றியுள்ளார்.

ஒபாமா-பிடென் நிர்வாகம், இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மூலோபாய, பாதுகாப்பு, பொருளாதார, பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களில் தொடர்ந்து தனது ஒத்துழைப்பை ஆழப்படுத்தியது. அமெரிக்க-இந்தியா கூட்டாட்சியை வளர்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் பிடென் ஒரு முக்கியச் சாம்பியனாக இருந்தார். உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை உணர்ந்த ஒபாமா-பிடென் நிர்வாகம், சீர்திருத்தப்பட்ட விரிவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக இணைவதற்கு அமெரிக்காவின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒபாமா-பிடென் நிர்வாகம் இந்தியாவை - காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலையாகிய ஒரு "முக்கிய பாதுகாப்பு கூட்டாளராக” அறிவித்தது - இது இந்தியா தனது இராணுவத்தை வலுப்படுத்தத் தேவையான மேம்பட்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களில், இந்தியா நமது நெருங்கிய கூட்டாளர்களுடன் இணையாக நடத்தப்படுவதை உறுதிசெய்கிறது. 

ஜனாதிபதி ஒபாமா மற்றும் துணை ஜனாதிபதி பிடென் ஆகியோரும் நமது நாடுகள் ஒவ்வொன்றிலும் பிராந்தியங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவுடனான நமது ஒத்துழைப்பை வலுப்படுத்தினர். தெற்காசியாவில் பயங்கரவாதத்திற்கு சகிப்புத்தன்மை இருக்கக் கூடாது என்று பிடென் நம்புகிறார் - அது எல்லை தாண்டியதாக இருந்தாலும் அல்லது வேறு வகையானதாக இருந்தாலும். சீனா உட்பட எந்த நாடும் தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தினால் தண்டனையிலிருந்து தப்ப முடியாத, ஒரு விதிகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் நிலையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்க பிடென் நிர்வாகம் இந்தியாவுடன் இணைந்து செயல்படும். 

ஒபாமா-பிடென் நிர்வாகம் நமது மக்கள் அனைவரையும் அச்சுறுத்தும் உலகளாவிய காலநிலை நெருக்கடிக்கு தீர்வு காணும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக கையெழுத்திடுவதில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றியது. பிடென் நிர்வாகம் அமெரிக்காவை மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்திற்குள் கொண்டுவரும், இது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவுடன் மீண்டும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கும், நமது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் நமது தூய்மையான எரிசக்தி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து செயல்படுவதற்கான திறனை நமக்கு வழங்கும், இது இல்லாமல் நமக்குத் தேவையான பசுமை நம்மால் பொருளாதாரத்தை உருவாக்க முடியாது. 

இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான பங்காளிகள் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிடென் வழங்குவார், மேலும் அமெரிக்க-இந்தியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு பிடென் நிர்வாகம் அதிக முன்னுரிமை அளிக்கும். இந்தியாவும் அமெரிக்காவும் பொறுப்பான பங்காளிகளாகச் செயல்படாமல் எந்தவொரு பொதுவான உலகளாவிய சவாலையும் தீர்க்க முடியாது. ஒன்றாக, பயங்கரவாத எதிர்ப்புப் பங்காளராக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் திறன்களை வலுப்படுத்துவது, சுகாதார அமைப்புகள் மற்றும் தொற்றுநோய்களைக் கையாளும் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் உயர் கல்வி, விண்வெளி ஆய்வு மற்றும் மனிதாபிமான நிவாரணம் போன்ற துறைகளில் நமது ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழப்படுத்துவோம். 

உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, அமெரிக்காவும் இந்தியாவும் நம்முடைய பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன: நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் கீழ் சமத்துவம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம். இந்த முக்கியக் கொள்கைகள் நம் ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பல தடைகளைத் தாண்டி வந்திருக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் இவையே நமது வலிமையின் ஆதாரமாகத் தொடரும்.